வெளியிடப்பட்ட நேரம்: 22:01 (07/06/2017)

கடைசி தொடர்பு:10:11 (08/06/2017)

#ChampionsTrophy: 219 ரன்கள் குவித்தது தென்னாப்பிரிக்கா. வாழ்வா சாவா ஆட்டத்தில் வெல்லுமா பாகிஸ்தான்?

சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்துள்ளது தென் னாப்பிரிக்கா.

மில்லர்

Photo Courtesy: ICC

'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 முன்னணி அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளன. முதல் கட்ட போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அரையிறுதிக்குள் நுழைய அணிகள் பலப்பரீட்சை நடத்தத் தொடங்கியுள்ளன.  இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று, இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இதனிடையே, இன்று எட்பாஸ்டனில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக, டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 104 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜுனைத் கான் மற்றும் இமாத் வாசிம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது பாகிஸ்தான்.