வெளியிடப்பட்ட நேரம்: 00:51 (08/06/2017)

கடைசி தொடர்பு:09:59 (08/06/2017)

என்னடா இது டிவில்லியர்ஸ்க்கு வந்த சோதனை..!

சாம்பியன்ஸ் டிராபி குரூப்-பி பிரிவில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதிவருகின்றன. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டேவிட் மில்லர் 75 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் டிவில்லியர்ஸ், கோல்டன் டக்கில் வெளியேறினார். அதாவது, சந்தித்த முதல் பந்திலேயே அவர் வெளியேறினார்.

Devilliers


டிவில்லியர்ஸ் கேரியரில் கோல்டன் டக் ஆவது இதுவே முதல் முறையாகும். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் டிவில்லியர்ஸின் இந்த வேதனை சாதனை, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, பாகிஸ்தான் அணி 27 ஓவர்களுக்கு 119 ரன் எடுத்துள்ளது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலைக்கு பாகிஸ்தான் கையே ஓங்குகிறது.