#ChampionsTrophy: இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை

இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி 8-வது போட்டியில், இந்திய அணியை எதிர்கொள்கிறது இலங்கை.

india

கோப்பு படம் (நன்றி: ESPN)

'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட  எட்டு முன்னணி அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், அரையிறுதிக்குத் தகுதி பெற, அணிகளுக்கிடையில் போட்டா போட்டி நடந்துவருகிறது. இதனிடையே, இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணியும் இந்திய அணியும் மோதுகின்றன.

#UPDATES:

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை, பந்து வீச்சைத் தேர்வுசெய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய  களமிறங்க  உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா களமிறங்குகின்றனர். 3 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.

இந்தியாவின் தொடக்க வீரர் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!