வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (08/06/2017)

கடைசி தொடர்பு:17:27 (08/06/2017)

#ChampionsTrophy- 'ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெளியே அனுப்புவது இன்பமே' - பட்லர்!

சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து ஆஸ்திரேலியாவை வெளியே அனுப்புவது மகிழ்வளிக்கும் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஜோஸ் பட்லர்.

பட்லர்

கிரிக்கெட்டின் மினி உலகக் கோப்பையான சாம்பியன்ஸ் டிராபியின் லீக் ஆட்டங்கள் இன்னும் சில நாள்களில் முடிவுக்கு வரவுள்ளது. லீங் ஆட்டங்கள் முடிவுக்கு வரும் நிலையில், எந்த நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்று தெரிந்துவிடும். ஏற்கெனவே இங்கிலந்து அணி மட்டும் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இங்கிலாந்து அணியுள்ள அதே குரூப்பில்தான்  ஆஸ்திரேலியாவும் இருக்கிறது. ஆஸ்திரேலியா இதுவரை விளையாடிய இரண்டு போட்டியிலும் மழை குறுக்கிட்டதால், இரண்டு போட்டியிலும் வெற்றி பெற முடியாத நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டது. இதனால், அந்த அணி, மூன்றாவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்நிலையில்தான், வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியன்ஸ் டிராபி லீக் ஆட்டத்தில் மோத உள்ளன. இது குறித்து இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் ஸ்டார் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜோஸ் பட்லர், 'நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் அரையிறுதிக்குத் தேர்வாகிவிட்டோம் என்பது தெரியும். இருப்பினும் கடைசி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதியில் விளையாட விரும்புகிறோம். அதுவும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவது இன்பம் தரும் செயல்தானே' என்று சிலாகித்துள்ளார்.