பிரெஞ்சு ஓப்பன்: கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை சாம்பியன்

rohan bopanna

பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா - கேப்ரியலா டேப்ரோவ்ஸ்கி இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கிய இடம்பெற்றுள்ள பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ், பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரியலா டேப்ரோவ்ஸ்கி இணை தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறது. அரையிறுதிப் போட்டியில் ஹவக்கோவா - ரோஜர் வாசெலின் இணையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது போபண்ணா - டேப்ரோவ்ஸ்கி இணை.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் குரோனேஃபீல்டு - ராபர்ட் பெரா இணையை எதிர்கொண்டது போபண்ணா இணை. பரபரப்பான இப்போட்டியில் 2-6, 6-2, 12-10 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடியது போபண்ணா இணை. கிராண்ட்ஸ்லாம் பிரிவில் முதன்முறையாகப் பட்டம் வெல்கிறார் போபண்ணா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!