வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (08/06/2017)

கடைசி தொடர்பு:18:44 (08/06/2017)

#ChampionsTrophy- சதம் அடித்தார் தவான்... வலுவான நிலையில் இந்தியா!

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், இந்தியாவின் தொடக்க வீரர் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

Dhawan

'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட எட்டு முன்னணி அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இன்னும் சில நாள்களில் லீக் ஆட்டம் முடியவுள்ள நிலையில், அணிகளுக்கு இடையில் போட்டா போட்டி நடந்து வருகிறது. இதனிடையே, இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணியும் இந்திய அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற இலங்கை அணி, பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை நிதானமாக ஆரம்பித்த இந்தியா, தற்போது அதிரடி காட்டி வருகிறது. இந்நிலையில், தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், சதம் விளாசி தொடர்ந்து களத்தில் பந்தை சிதறடித்து வருகிறார். முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 300 ரன் மார்க்கை கடந்தது போல இன்றைக்கும் இந்தியா கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தவானுடன் தோனி களத்தில் உள்ளார். இந்தியா, 43 ஓவர்கள் முடிவில் 251 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தொடர்ந்து விளையாடி வருகிறது.