வெளியிடப்பட்ட நேரம்: 19:04 (08/06/2017)

கடைசி தொடர்பு:19:33 (08/06/2017)

#ChampionsTrophy: தவான், தோனி அதிரடியில் 321 ரன்கள் குவித்தது இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபியின், இலங்கைக்கு எதிரான போட்டியில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் குவித்துள்ளது இந்தியா.

டாஸ் வென்ற இலங்கை அணி, பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, தனது இன்னிங்ஸை நிதானமாக ஆரம்பித்த இந்தியா, பிற்பாதியில் அதிரடி காட்டியது. தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், 128 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தார். தோனி அதிரடியாக விளையாடி, 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் வேகமெடுக்க உதவினார். ரோகித் ஷர்மாவும் 79 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இந்திய அணி, 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 321 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. 

இலங்கை தரப்பில், மலிங்கா மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கவுள்ளது.