வெளியிடப்பட்ட நேரம்: 21:18 (08/06/2017)

கடைசி தொடர்பு:09:33 (09/06/2017)

#ChampionsTrophy- ப்ரட் லீ சாய்ஸும் இந்தியாதான்!

சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்தியாவே மறுபடியும் வெல்ல வாய்ப்பிருப்பதாக, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ப்ரட் லீ ஆரூடம் கூறியுள்ளார். 

Brett Lee

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் ட்ராபியின் லீக் ஆட்டங்கள் இன்னும் சில நாள்களில் முடிவடைய உள்ளன. ஆனால், களத்தில் இருக்கும் எட்டு அணிகளில், இதுவரை இங்கிலாந்து மட்டும்தான், அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. இன்று இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றிபெறும் பட்சத்தில், இந்தியாவும் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். 

இந்நிலையில்தான் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ப்ரட் லீ, 'இந்த சாம்பியன்ஸ் ட்ராபி உண்மையாகவே சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை எனக்கு எது மிகவும் பிடித்திருந்தது என்றால், அவர்கள் மிகச் சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். இந்தியா, இந்தமுறையும் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான அவர்களின் வெற்றி, மிக அற்புதமானது. அது, மிகவும் தேவைப்பட்ட வெற்றியும்கூட. இந்திய அணியில் நல்ல பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் சரியான கலவையில் இருக்கிறார்கள். அவர்கள், இறுதிப் போட்டிவரை செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். சாம்பியன்ஸ் ட்ராபியைப் பொறுத்தவரை, இரண்டு வாரங்களுக்குள் அனைத்து போட்டிகளும் நடந்து முடிந்து, ரிசல்ட் தெரிந்துவிடும் என்பதுதான் சுவாரஸ்யமே!' என்று கூறியுள்ளார்.