2019 வரை அனில் கும்ளேதான் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ளே 2019 ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. 


இந்திய சுழற்பந்து வீரரான அனில் கும்ளே, 2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து விலகினார். பின்னர் அவர், 2016 ஆம் ஆண்டு, இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக் காலம் முடியவுள்ளதால், அடுத்த பயிற்சியாளரை நியமிப்பதற்கான பணியில் பிசிசிஐ ஈடுபட்டுவருகிறது. பயிற்சியாளர் நியமிப்பது தொடர்பாக, முன்னாள் இந்திய அணி வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவ்ரவ் கங்குலி, வி.வி.எஸ்.லெட்சுமணன் ஆகியோர் லண்டனில் சந்தித்து விவாதித்தனர்.

இதுதொடர்பாக, பிசிசிஐ-யின் பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா, செயலாளர் அமிதாப் சௌந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான தொடரில், தற்போது உள்ள அணியே தொடர வேண்டும். இதற்கிடையில் பயிற்சியாளரை நியமிப்பது சிரமம். கும்ளே சிறந்த பயிற்சியாளராக செயல்படுகிறார்' என்று தெரிவித்துள்ளார். எனவே, 2019 ஆம் ஆண்டு வரை கும்ளே இந்திய அணியின் பயிற்சியாளராகத் தொடர்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!