வெளியிடப்பட்ட நேரம்: 05:50 (10/06/2017)

கடைசி தொடர்பு:05:50 (10/06/2017)

இந்தியாவுடன் விளையாடுவாரா டிவில்லியர்ஸ்?

திடீர் திருப்பங்களைச் சந்தித்து வருகிது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட். ரேங்க்கிங்கில் டாப்பில் இருக்கும் அணிகளை, ரேங்க்கிங்கில் கீழே இருக்கும் அணிகள் தோற்கடித்து அதிர்ச்சியளித்து வருகின்றன. தென் ஆப்ரிக்கா, இந்தியா, நியூஸிலாந்து உள்ளிட்ட அணிகள் இதில் தப்பிக்கவில்லை.

Devilliers


முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்தியா, இலங்கையிடம் தோல்வியடைந்தது. இதனால், அரையிறுதிக்கு செல்ல தென் ஆப்ரிக்க அணியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. நாளை நடக்கும் இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் காலிறுதிப் போட்டியாக இருக்கும். வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குச் செல்லும், தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.


இதனிடையே தென் ஆப்ரிக்காவின் கேப்டனும், அணியின் ஸ்டார் பிளேயருமான ஏபி டிவில்லியர்ஸ்க்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் இன்று மருத்துவ சோதனைக்கு செல்ல உள்ளார். மருத்துவ சோதனையில் அவர் முழு உடல் தகுதியுடன் உள்ளார் என்று சான்றிதழ் கிடைத்தால்தான், அவர் இந்தியா உடனானப் போட்டியில் களமிறங்குவார். ஒருவேளை அவர் முழு உடல் தகுதியுடன் இல்லாவிடின் நாளைய போட்டியில், ஏபிடி விளையாட மாட்டார். இது அந்த அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும்.