வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (10/06/2017)

கடைசி தொடர்பு:16:52 (10/06/2017)

#FrenchOpen: 10-வது முறையாக இறுதிப்போட்டியில் நடால்!

10-வது முறையாக பிரெஞ்சு ஓப்பன் போட்டியில், இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளார் ரஃபேல் நடால்.

நடால்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டி பாரீஸில் நடைபெற்றுவருகிறது. இதில் நடால், ஜோக்கோவிச், ஆண்டி முர்ரே, வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்றனர். முதல் கட்ட ஆட்டங்கள் முடிந்த நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடால், தைம், வாவ்ரிங்கா, ஆண்டி முர்ரே ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், முன்னணி வீரர் முர்ரேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா. இதனிடையே இன்று நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியில் டோமினிக் தைமை எதிர்கொண்டார் நடால். இந்த போட்டியில் தைமை 6-3, 6-4, 6-0 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தினார் ரஃபேல் நடால். இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் வாவ்ரிங்காவுடன் மோதுகிறார் நடால். பிரெஞ்சு ஓப்பன் இறுதிப்போட்டிக்குள் 10-வது முறையாக நுழைகிறார் நடால்.