300-வது போட்டியில் யுவராஜ்... வாழ்த்தும் விராட் கோலி!

300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் யுவராஜ் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

kohli

இந்திய அணியின் மேட்ச் வின்னராக என்றுமே போற்றப்படுபவர் யுவராஜ் சிங். பேட்டிங், பந்துவீச்சு என இருந்த இந்திய அணியில் அசத்தலான பீல்டிங் செய்யவும் ஆள் உள்ளது என்று உலகுக்கே உணர்த்தியவர் யுவராஜ் . கேன்சர் நோய், மோசமான ஃபார்ம் என பல்வேறு சோதனைகளை கடந்து சாதனை நாயகனாக வலம் வருகிறார் அவர். இதுவரை 299 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங், நாளை தென் ஆப்பிரிக்காவுடன் 300-வது போட்டியில் களமிறங்குகிறார்.

இதனிடையே யுவராஜ் சிங்குக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி வாழ்த்து கூறியுள்ளார். இன்று இங்கிலாந்தில் செய்தியாளர்களை சந்தித்த கோலி, 'இந்தியாவுக்காக அவர் பல சாதனைகளைச் செய்துள்ளார். தனிப்பட்ட முறையில் பல தடைகளை அவர் சந்தித்துள்ளார். தற்போது 300-வது போட்டியில் அவர் விளையாடுவது மிகப்பெரிய சாதனையாகும். நாளைய போட்டி யுவராஜுக்கு சிறப்பாக அமையும்' என வாழ்த்தியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!