வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (10/06/2017)

கடைசி தொடர்பு:18:50 (10/06/2017)

இங்கிலாந்துக்கு 278 ரன்கள் இலக்கு - ஹெட் 71 ரன்களைக் குவித்தார்..!

ஐ.சி.சி சாம்பியன் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்களை குவித்துள்ளது. 

Photo courtesy: ESPN


ஐ.சி.சி சாம்பியன் தொடரின் 10-வது ஆட்டத்தில், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. பிர்மிங்காம் நகர எட்க்பாஸ்டன் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை பேட் செய்ய பணித்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக வார்னரும், ஆரோன் ஃபின்ச்சும் களமிறங்கினர். வார்னர் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதிரடியாக ஆடிய ஃபின்ச் 68 ரன்களைக் குவித்தார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் 56 ரன்களைக் குவித்தார். அதிரடியாக ஆடிய டிரவிஸ் ஹெட் ஆட்டமிழக்கமால் 71 ரன்களைக் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் உட் 10 ஓவர் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார்.