சர்வதேச பேட்மின்டன் தரவரிசையில் கலக்கும் இந்திய வீரர்கள்!

sai

சர்வதேச பேட்மின்டன் தரவரிசைப் பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள் டாப் இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர். உலகளவில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தரவரிசைப் பட்டியலில் 15 இடங்களுக்குள் மூன்று இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அஜய் ஜெயராம் 13-வது இடத்திலும், கிதாம்பி ஶ்ரீகாந்த் 14-வது இடத்திலும், சாய் ப்ரணீத் 15-வது இடத்திலும் உள்ளனர். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து 3-வது இடத்தில் நீடித்து வருகிறார். இந்திய பேட்மின்டனில் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் 11-வது இடத்தில் நீடிக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!