2020-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் புதிதாக 15 போட்டிகள்

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் 2020-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 15 போட்டிகளைச் சேர்ப்பதற்கு ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. 


2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் புதிதாக 15 போட்டிகள் சேர்க்கப்படவுள்ளன. இதுகுறித்து பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், 'டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி மிகவும் கண்கவரும் வகையில் இருக்கும். பெருமளவிலான இளைஞர்களை உள்ளடக்கும் வகையிலும் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் இருக்கும். இந்த முறை பெண்களுக்கு 50 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படுகிறது' என்று தெரிவித்தார். அதன்படி ஒலிம்பிக்கில் புதிதாக 15 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த 15 போட்டிகள்:


1.கலப்பு தொடர் ஓட்டம்
2.கலப்பு தொடர் நீச்சல்
3.கலப்பு கூடைப்பந்து போட்டி
4.கலப்பு ஜுடோ 
5.கலப்பு சைக்கிள் ஓட்டுதல் (BMX)
6.கலப்பு சைக்கிள் ஓட்டுதல் (Track)
7.கலப்பு தடகள போட்டி (4x100 மீட்டர்) 
8.கலப்பு கத்திச்சண்டை
9.கலப்பு வில்வித்தை போட்டி
10.கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ்
11.குத்துச்சண்டை
12.படகுப்போட்டி
13.கலப்பு இரட்டையர் டிரையத்லான்
14.பளு தூக்குதல்
15. கலப்பு துப்பாக்கிச் சுடுதல்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!