வெளியிடப்பட்ட நேரம்: 03:29 (11/06/2017)

கடைசி தொடர்பு:04:07 (11/06/2017)

பிரெஞ்ச் ஓப்பன் : சாதனையுடன் பட்டம் வென்ற லாத்வியா வீராங்கனை!

 

பிரெஞ்ச் ஓப்பன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ருமேனியா நாட்டின்  சிமோனா ஹாலெப் மற்றும் லாத்வியா நாட்டின் ஜெலினா ஆஸ்டாபென்கோ மோதினர். இதில் சிமோனா உலகின் 4-ம் நிலை வீராங்கனை ஆவார். ஜெலினா 47-ம் நிலை வீராங்கனை ஆவார். இதனால், சிமோனா எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. 

 

 

அதன்படியே முதல் செட்டை சிமோனா வென்றார். இதையடுத்து கடுமையாக போராடிய ஜெலினா, இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டைக் கைப்பற்றினார். இதன் மூலம் 4-6,6-4,6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, உலகின் 4-ஆம் நிலை வீராங்கனைக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்தார், இந்த லாத்வியா நாட்டு வீராங்கனை!


குறிப்பாக, லாத்வியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும். ஜெலினாவுக்கு  ரூ.15 கோடி பரிசும், 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்பட உள்ளன.


இந்நிலையில், இன்று நடக்கும் ஆடவர் ஒன்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் வாவ்ரிங்கா மற்றும் நடால் மோதுகின்றனர்.