வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (11/06/2017)

கடைசி தொடர்பு:14:52 (11/06/2017)

வாழ்வா.. சாவா போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு

match

வாழ்வா.. சாவா போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது. மிகமுக்கிய போட்டியான இதில் டாஸ் வென்றார் இந்திய கேப்டன் விராட் கோலி. தொடர்ந்து தென் ஆப்ரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இந்நிலையில் முதலில் பந்துவீச களமிறங்குகிறது இந்திய அணி.

இந்த ஆட்டத்தில் நட்சத்திர பந்துவீச்சாளரான அஸ்வின் களமிறங்குகிறார். முதலில் பேட்டிங் செய்வது தங்களுக்கு சாதகமான ஒன்று என கூறியிருக்கிறார் தென் ஆப்ரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ். இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற முடியும்.