வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (11/06/2017)

கடைசி தொடர்பு:07:42 (12/06/2017)

#INDvsSA 191 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்கா!

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன் ட்ராபித் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. 

இந்தியா

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 முன்னணி அணிகள் இத்தொடரில் பங்கேற்று வருகின்றன. இதனிடையே, தகுதிச் சுற்று ஆட்டங்களில் வெற்றிபெற்று இங்கிலாந்தும் வங்க தேசமும் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துவிட்டன. இதையடுத்து பி பிரிவில் அரையிறுதிக்குள் நுழையும் அணியை தீர்மானிக்கும் போட்டியில் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இன்று மோதுகின்றன.

ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 44.3 ஓவரில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டி காக் 53 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அஸ்வின், பாண்டியா, ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். இன்றைய ஆட்டத்தில் பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி, 3 பேரை ரன்-அவுட் செய்துள்ளது. இதில் அதிரடி வீரர்கள் டி வில்லியர்ஸ் மற்றும் மில்லர் அடங்குவார்கள். இதையடுத்து 192 என்ற எளிய இலக்குடன் களமிறங்கவுள்ளது இந்தியா.