வெளியிடப்பட்ட நேரம்: 21:39 (11/06/2017)

கடைசி தொடர்பு:08:32 (12/06/2017)

#INDvSA தவான், கோலி அரைசதம்.. அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது இந்தியா.

இந்தியா

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 முன்னணி அணிகள் இத்தொடரில் பங்கேற்று வருகின்றன. இதனிடையே தகுதிச் சுற்று ஆட்டங்களில் வெற்றிபெற்று இங்கிலாந்து, வங்க தேசமும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துவிட்டன. இதையடுத்து பி பிரிவில் அரையிறுதிக்குள் நுழையும் அணியை தீர்மானிக்கும் போட்டியில் இந்தியாவுடன் தென் ஆப்பிரிக்காவும் இன்று மோதின.

ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 44.3 ஓவர்களின் முடிவில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டி காக் 53 ரன்கள் குவித்தார். இதையடுத்து 192 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 38 ஓவர்களின் முடிவில் 193 ரன்கள் குவித்து வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 78 ரன்களும், கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 76 ரன்களும் குவித்தனர். இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.