10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நடால்! #FrenchOpen

10-வது முறையாக பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஸ்பெயினின் ரஃபேல் நடால்.

நடால்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஃப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டி பாரீஸில் நடைபெற்றுவருகிறது. இதில் நடால், ஜோக்கோவிச், ஆண்டி முர்ரே, வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பங்கேற்றனர். அரையிறுதி ஆட்டங்கள் முடிந்த நிலையில், இன்று ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவும் இறுதிப்போடியில் மோதினர்.

இந்தப் போட்டியில் வாவ்ரிங்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் நடால். 2 மணி நேரம் 5 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 6-2, 6-3, 6-1 செட் கணக்கில் வாவ்ரிங்காவை வீழ்த்தியுள்ளார் நடால். இதன் மூலம் 10-வது முறையாக பிரெஞ்சு ஓப்பன் சாம்பியனாகிறார் நடால். தனது 19 வயதில் முதல்முறையாக பிரெஞ்சு ஓப்பன் பட்டம் வென்ற நடாலுக்கு இப்போது 31 வயது. களிமண் தரை போட்டிகளில் வீழ்த்த முடியாதவராக வலம் வருகிறார் நடால்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!