வெளியிடப்பட்ட நேரம்: 02:12 (12/06/2017)

கடைசி தொடர்பு:12:09 (12/06/2017)

'என்ன செய்தாலும் தோல்வி துரத்துகிறது...' - நொந்து கொண்ட டிவில்லியர்ஸ்

இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் தோல்வியடைந்த பின், தென்னாப்பிரிக்கா அணியின் ஆட்டம்குறித்து பேசியுள்ளார், அந்த அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ்.

 

தென்னாப்பிரிக்கா, இந்த ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி ஆரம்பிக்கும்போது, சர்வதேச அணிகள் தர வரிசையில் முதலிடத்தில் இருந்தது. மிகவும் வலுவான பேட்டிங் மற்றும் பௌலிங் பலம் பொருந்திய டீமுடன்தான் சாம்பியன்ஸ் ட்ராபியை அந்த அணி ஆரம்பித்தது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிர்ச்சிகரமான வகையில் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது தென்னாப்பிரிக்கா. 

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா தொடர்ச்சியாக பெரிய தொடர்களின் முக்கியமான போட்டிகளில் தோல்வியடைவதுகுறித்து அந்த அணியின் கேப்டன் டிவிலியர்ஸ், 'எங்கள் அணிக்கு அனைத்து திறமையும் அதிகமாகவே உள்ளது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நெட் பயிற்சிகளைக் கடுமையாக மேற்கொள்கிறோம். மிகக் கடுமையான பிற பயிற்சிகளில் ஈடுபடுகிறோம். நாங்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம். ஆனால், ஏதோ சில காரணங்களுக்காக தோல்வி துரத்துகிறது.' என்று கவலைததும்பப் பேசியுள்ளார். 

இந்தியாவின் தோல்விக்குப் பிறகு, தலைமைப் பதவியிலிருந்து விலகுவீர்களா என்று கேள்வி எழுப்பியபோது டிவில்லியர்ஸ், 'அப்படி நான் விலக மாட்டேன். நான் ஒரு நல்ல கேப்டன். இந்த அணியை என்னால் முன்னோக்கி வழிநடத்த முடியும். இந்த அணிக்கு தலைமை வகித்து உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன். நான் கேப்டன் பொறுப்பில் மிகவும் விருப்பப்பட்டே இருக்கிறேன்.' என்று கூறியுள்ளார்.