'சிறப்பான ஆட்டத்துக்கு ஐபிஎல் முக்கிய காரணம்!'- நெகிழும் இங்கிலாந்து வெற்றி நாயகன் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்தில், ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது, கிரிக்கெட்டின் 'மினி உலகக் கோப்பை' என்று சொல்லப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி. இதில்,இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடிவருகிறது. இங்கிலாந்து அணி சிறப்பாகச் செயல்பட்டுவருவதற்கு, ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் ஆட்டம் முக்கியப் பங்கு வகித்துவருகிறது. இந்நிலையில் ஸ்டோக்ஸ், 'தற்போது சாம்பியன்ஸ் ட்ராபியில் நன்றாக விளையாட ஐபிஎல் முக்கிய காரணம்' என்று கூறியுள்ளார்.

Ben Stokes

 

இதுகுறித்து அவர், 'ஐபிஎல் மூலம் மிக அசாதாரண அனுபவம் நிறைய கிடைத்தது. ஒரு மிகப் பெரிய மக்கள் கூட்டத்தின் முன்னர் இக்கட்டான தருணங்களில் விளையாடுவது ஐபிஎல் மூலம் எனக்கு கிடைத்த அனுபவம். திரும்பத் திரும்ப அப்படி விளையாடுவதற்கு ஐபிஎல் வாய்ப்பு கொடுத்தது. ஐபிஎல் போட்டிகளில் நீங்கள் உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவீர்கள். அவர்களுக்கு எதிராக நாம் நன்றாக விளையாடிவிட்டால், தானாக நம் நம்பிக்கை அதிகரிக்கும். அதற்குப் பிறகு,சர்வதேச அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.' என்று நெகிழ்வோடு பேசியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!