சர்வதேச துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தங்க இணை!

shoot

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய இணை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி அஜெர்பைஜான் நாட்டிலுள்ள கபாலா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், ஜித்து ராய், ஹீனா சித்து அடங்கிய இந்திய இணை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம், டெல்லியில் நடைபெற்ற சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் இதே இணை தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 45 நாடுகளிலிருந்து 430 வீரர்கள் கபாலா நகரில் நடைபெறும் இந்த சர்வதேச போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில், 23 பேருடன் இந்தியா பங்கேற்றுள்ளது. அதில், 12 வீராங்கனைகள், 11 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கில், தற்போது ஹீனா - ஜித்து தங்கம் வென்றுள்ள 'கலப்பு இணை ஏர் பிஸ்டல்' போட்டியும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!