வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (12/06/2017)

கடைசி தொடர்பு:21:50 (12/06/2017)

இங்கிலாந்து அணியின் ஜெர்சியை அணியப் போகும் வார்னே..! காரணம் கங்குலி

கங்குலியுடன் பந்தயத்தில் தோற்றதால் ஒரு நாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் ஜெர்சியை அணியவுள்ளேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான சாம்பியன்ஸ் ட்ராபி லீக் போட்டி எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டி நடைபெறுவதற்கு முன்னர் கங்குலியும், ஷேன் வார்னேவும் பந்தயம் கட்டியுள்ளனர். இங்கிலாந்து வெற்றி பெறும் என்று கங்குலியும், ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று வார்னேவும் தெரிவித்துள்ளனர். தோற்றவர்கள், வெற்றி பெறும் அணியின் ஆடையை அணியவேண்டும் என்று பந்தயம்கட்டியுள்ளனர். இங்கிலாந்து வெற்றிபெற்றதால் வார்னே பந்தயத்தில் தோற்றுவிட்டார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட வார்னே, 'கங்குலியுடன் பந்தயத்தில் தோற்றுவிட்டேன். இங்கிலாந்து அணியின்ஆடையைக் கண்டுபிடித்து வாங்கி ஒரு நாள் முழுவதும் அணியவுள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார்.