Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#ChampionsTrophy- இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்!

கிரிக்கெட்டின் மினி உலகக் கோப்பையான சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி லீக் ஆட்டம் இன்று இங்கிலாந்தின் கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், யார் வெற்றி பெறுவார்களோ அவர்கள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து, இந்த போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான், இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தது. தனது முதல் இன்னிங்ஸை அதிக ஸ்கோர் அடிக்கும் எண்ணத்துடன் இலங்கை ஆரம்பித்தது. ஆனால் அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான நிரோஷன் திக்வெல்லாவைத் தவிர வேறு யாரும் அரை சதத்தைக்கூட தாண்டவில்லை. அதனால், அந்த அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஜுனைத் கான் மற்றும் ஹாசன் அலி தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது பாகிஸ்தான். அந்த அணியிலும் தொடக்க வீரர்களில் ஒருவரான ஃபகார் சமான் மட்டுமே அரை சதத்தை கடந்தார். ஆனால், மற்ற பேட்ஸ்மேகளெல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தன. ஆனால் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹ்மத் முகமது அமீருடன் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தார். இருவரும் ஆபாரமாக விளையாடி நிர்ணயித்த இலக்கை, 44.5 ஓவர்களில் கடந்து இலங்கையை வீழ்த்தினர். இதையடுத்து, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் அணி வரும் வரும் புதன் கிழமை (14-6-17) அன்று நடக்கும் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் இந்தியா, வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement