அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்கேல் ஜோர்டனின் பழைய ’ஷூ’!

அமெரிக்காவின் கூடைப்பந்து விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன் பயன்படுத்திய பழைய ‘ஷூ’க்கள் அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு ,புதிய சாதனை படைத்துள்ளது.

மைக்கெல் ஜோர்டன்

உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர், மைக்கேல் ஜோர்டன். இவர், 13 ஆண்டுகளுக்கு முன்பே விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். முதலில் பேஸ் பால் விளையாட்டு வீரராகத் தன் பயணத்தைத் தொடங்கியவர், ஜோர்டன். பேஸ் பால் விளையாட்டை  வரலாற்றிலேயே இவரைப்போல விளையாடிய ஒருவர் கிடையாது என்று பரவலாகப் பேசப்பட்டபோது, யாரும் எதிர்பாராத விதமாக அந்த விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். பிறகு, கூடைப்பந்து விளையாட்டில் நுழைந்து அதிலும் ஜொலித்தார். ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் அனைத்து போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ஜோர்டனுக்கு தற்போது 53 வயதாகிறது.

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரராக முன்னிலையிலிருந்த காலத்தில், ஜோர்டன் 1984-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அவர் பயன்படுத்திய ‘ஷூ’க்கள் சமீபத்தில் ஏலம் விடப்பட்டன. யாரும் எதிர்பாராத வகையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜோர்டனின் ‘ஷூ’க்கள், வரலாற்றுச் சாதனை புரிந்தது. இதுவரை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திய ‘ஷூ’க்களே அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது, ஜோர்டனின் ‘ஷூ’க்கள்தானாம். முன்னதாக, ஓர் அமெரிக்கக் கூடைப்பந்து வீரரின் ஷூ, 68 லட்சம் ரூபாய்க்கு ஏலம்போனது குறிப்பிடத்தக்கது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!