வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (13/06/2017)

கடைசி தொடர்பு:17:16 (13/06/2017)

மெஸ்ஸியைத் தொடர்ந்து வரி ஏய்ப்பில் சிக்கினார் ரொனால்டோ!

போர்ச்சுக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 14.7 மில்லியன் யூரோ வரி ஏய்ப்புச் செய்ததாகக் குற்றம்சாட்டுள்ளது.

ரொனால்டோ

போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரராகப் போற்றப்படும் இவருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர், ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காகவும் விளையாடிவருகிறார். கடந்த 4ஆம் தேதி, இவரின் ரியல் மாட்ரிட் அணி, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கோப்பையை வென்றது.

இதனிடையே, கிறிஸ்டியானோ ரொனால்டோமீது வரி ஏய்ப்புச் செய்துள்ளதாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. 2011ல் இருந்து 2014ஆம் ஆண்டுக்குள், 14.7 மில்லியன் யூரோ அளவில் அவர் வரி ஏய்ப்புச் செய்ததாகத்  தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், கால்பந்து விளையாட்டின் மற்றொரு முன்னணி வீரரான மெஸ்ஸியும் வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 4 மில்லியன் யூரோ அளவில் இவர் வரி ஏய்ப்புச் செய்ததாகக் கூறப்பட்டது.