வைரலான ஜாகீர் கானின் ’கலாய்’: என்ன சொல்லப்போகிறார் யுவராஜ்? | Zaheer khan teasing Yuvraj Singh goes viral in Twitter!

வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (14/06/2017)

கடைசி தொடர்பு:19:25 (14/06/2017)

வைரலான ஜாகீர் கானின் ’கலாய்’: என்ன சொல்லப்போகிறார் யுவராஜ்?

இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரமான ஜாகீர் கான், சக வீரர் யுவராஜ் சிங்கை ட்விட்டரில் கேலி செய்ததே இன்றைய வைரல் ஹிட்.

யுவராஜ்- ஜாகீர் கான்

கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் அண்மையில் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி அவ்வளவு சிறப்பாகச் செயல்படவில்லை என்றாலும், தென் ஆப்ரிக்க அணியின் மோசமான ‘ஃபார்ம்’ காரணமாக இந்திய அணி வெற்றி பெற்றது. வழக்கம் போல் டிவி முன் உட்கார்ந்துகொண்டு கமென்ட்டுகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கும் பலருக்கும் மத்தியில், டிவி முன் அமர்ந்து போட்டியைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான். விளையாட்டின் போக்கைக் கண்டு கமென்ட் கொடுக்க ட்விட்டர் நோக்கி விரைந்துள்ளார் ஜாகீர் கான்.

தன் ட்விட்டர் பக்கத்தில், போட்டியின் நிலைகளை ஸ்கோர் வாரியாக பதிவு செய்து வந்தார். இதற்கு மற்றொரு கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங், தன் பதில் ட்விட்டில், ‘என்ன இப்போதெல்லாம் ட்விட்டரில் அதிகமாக பதிவு செய்கிறாயே?’ எனக் கேள்வியுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு ஜாகீர் அளித்த பதில் தான் ட்விட்டர் வைரல்.

யுவராஜுக்கு பதிலளித்த ஜாகீர், ‘நான் உன்னைப்போல் ஸ்டேட்டஸ் போட ஆரம்பித்துவிட்டேன். நீ ஏன் என்னைப் போல் ஃபீல்டிங் செய்கிறாய்’ என தென் ஆப்ரிக்க போட்டியின் போது பீல்டிங்கில் சொதப்பிய யுவராஜை கேலி செய்யும் வகையில் பதில் பதிந்தார். இந்த பதில் ட்விட்டுக்கு ஒரு சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ் பறக்க ட்விட்டர் ஹிட் ஆனது.

தற்போது ட்விட்டர்வாசிகள், ’ஜாகீரின் கேள்விக்கு யுவராஜ் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்’ என கலாய்த்து வருகின்றனர். என்ன சொல்வார் யுவராஜ்?


[X] Close

[X] Close