சாம்பியன்ஸ் டிராபி: 211 ரன்களுக்கு ஆல்-அவுட்டான இங்கிலாந்து

சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து 211 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. கார்டிப், சோபியா கார்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.

england

டாஸ் வென்ற பாகிஸ்தான், பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து, களமிறங்கியது இங்கிலாந்து. சொந்த மண்ணில் விளையாடுவதால் பெரும் எதிர்பார்ப்பு அந்த அணிமீது விழுந்தது. ரசிகர்கள் ஆரவாரத்தில் தொடக்க ஆட்டக்காரர்களாக பேர்ஸ்டோ, ஹேல்ஸ் களமிறங்கினர். இதில், ஹேல்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய பேர்ஸ்டோ 43 ரன்களில் ஆவுட் ஆனார். அதிகபட்சமாக ரூட் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆவுட் ஆனார்கள்.

இறுதியில் 49.5 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜுனைத் கான், ரயீஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 212 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது பாகிஸ்தான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!