மேற்கிந்திய தீவுகளுடன் கிரிக்கெட் தொடர்... இந்திய அணி அறிவிப்பு!

மேற்கிந்திய தீவுகளுடன் நடக்கவிருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா. சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு பிறகு, இந்திய அணி மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 1 டி-20 போட்டியில் இந்தியா விளையாடுகிறது.

இந்தநிலையில் இன்று மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பி.சி.சி.ஐ. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தொடர்ந்து நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23-ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. தற்போது நடந்துவரும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி தகுதிப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக டெல்லி அணி சார்பில் விளையாடிய ரிஷப் பண்ட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 97 ரன் குவித்த ரிஷப் பண்ட்க்கு முன்னணி வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய அணி விவரம் : ஷிகர் தவான், ரிஷப் பண்ட், அஜின்கியா ரஹானே, விராத் கோலி (கேப்டன்), யுவராஜ் சிங், தோனி, கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அஷ்வின், ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ்.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!