வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (15/06/2017)

கடைசி தொடர்பு:18:56 (15/06/2017)

#INDvBAN இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பங்களாதேஷ்...!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி நிதானமாக ஆடியது. தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும், அந்த அணி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. குறிப்பாக, தமீம் இக்பால், ரஹீம் ஆகியோரின் பார்ட்னர் ஷிப் அந்த அணிக்குக் கைக்கொடுத்தது. இதனால், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு அந்த அணி 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் இக்பால் 70, ரஹீம் 61 ரன்கள் எடுத்தனர். 

இந்திய அணித்தரப்பில் புவனேஷ்வர் குமார், பூம்ரா, கேதர் ஜாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லை. முக்கியமாக, ஒரு கேட்ச்சையும் அவர் தவற விட்டார். இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற இலக்குடன் இந்திய அணி சற்று நேரத்தில் களமிறங்கவுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.