இந்திய அணியில் தேர்வான பண்ட் என்ன சொல்கிறார் தெரியுமா?

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்குத் தேர்வாகியுள்ள ரிஷப் பண்ட், 'மூத்த வீரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஆவலுடன் உள்ளேன்' எனக் கூறியுள்ளார்.

பன்ட்

கடந்த ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியவர் ரிஷப் பண்ட். இவர் பல போட்டிகளில் நெருக்கடியான நேரங்களில் நேர்த்தியாக விளையாடி பாராட்டுகளைப் பெற்றார். 'எதிர்காலத்தில் இந்திய அணியின் முக்கிய வீரராக பண்ட் இருப்பார்' என டிராவிட் இவரைப் புகழ்ந்தார். இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியில் அவர் இடம்பிடித்துள்ளார்.

இதனிடையே இந்திய அணியில் இடம்பிடித்துள்ள பண்ட் கூறுகையில்,' மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதில் சிறப்பாக விளையாடுவது எனது இலக்கு' எனக் கூறியுள்ளார். மேலும், 'மூத்த வீரர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, எனது விளையாட்டில் கவனம் செலுத்துவேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!