வெளியிடப்பட்ட நேரம்: 22:12 (15/06/2017)

கடைசி தொடர்பு:07:41 (16/06/2017)

#ChampionsTrophy கங்குலியின் சாதனையை முறியடித்தார் ஷிகர் தவான்...!

இந்திய வீரர்களில் சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்த கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார் ஷிகர் தவான்.

தவான்

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டிக்குப் பாகிஸ்தான் முன்னேறிய நிலையில், இன்று இந்தியா - வங்கதேசம் இடையிலான 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 264 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதனிடையே இந்திய வீரர்கள் தரப்பில் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் அதிக ரன்கள் குவித்த கங்குலியின் சாதனையை தவான் உடைத்துள்ளார். லீக் சுற்றில்  நடைபெற்ற போட்டிகளில் ஒரு சதம், இரண்டு அரைசதங்கள் அடித்துள்ள தவான், சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் 680 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், இந்திய வீரரின் அதிகபட்சமாக கங்குலியின் 665 ரன்களே இருந்தது. மேலும், உலக அளவில் சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்தவர்களில் தவான் 4-வது இடத்தில் உள்ளார். கெயில் (791) முதலிடத்திலும், ஜெயவர்தனே (742), சங்ககாரா (683) முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளனர்.