வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (16/06/2017)

கடைசி தொடர்பு:11:40 (17/06/2017)

இந்தோனேசியா ஓப்பன் பேட்மின்டன்: பிரணாய், ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்தோனேசியா ஓப்பன் பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றும் பிரணாய் இருவரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தோனேஷியா ஓபன்

இந்தியாவின் இளம் நட்சத்திர பேட்மின்டன் வீரர் ஸ்ரீகாந்த். இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் சர்வதேச அளவில் 19-ம் இடத்திலிருக்கும் சூ வே வாங்-கைச் சந்தித்த ஸ்ரீகாந்த், 21-15, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதேபோல், மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்ட பிரணாய், ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்-கைச் சந்தித்தார். இந்தப் போட்டியில் லாங்கை, 21-18, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை உலகின் நம்பர்-3 வீரரான லீ சாங்-கை 25-வது இடத்தில் இருக்கும் பிரணாய் வீழ்த்தி முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்ட சாய்னா நேவால், சிந்து ஆகியோர் தோல்வியுற்றனர்.