வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தோனியின் அந்த முக்கிய ஐடியா... மனம் திறக்கும் கோலி!

வங்கதேசம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது இந்திய அணி. இதையடுத்து, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Dhoni Kohli

இந்நிலையில், வங்கதேசம் அணியுடனான வெற்றி குறித்து கேப்டன் கோலி மனம் திறந்துள்ளார். 'அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், இதற்கான ஒட்டுமொத்த பெருமையையும் நானே எடுத்துக் கொள்ள மாட்டேன். தோனியிடமும் ஆலோசனைக் கேட்டேன். 

இரண்டு விக்கெட் இழந்த பிறகு, வங்கதேச அணியின் தமீம் இக்பால் - ரஹீம் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். குறிப்பாக, இந்தச் சமயத்தில் ஓர் ஆஃப் ஸ்பின்னர், பந்து வீசினால் சரியாக இருக்கும் என்று தோனி கூறினார். பிறகு, இருவரும் கேதர் ஜாதவை பந்து வீச வைக்க முடிவு செய்தோம். அது கைக்கொடுத்தது. அணியை வெற்றி பெறவும் வைத்தது.

கேதர் நெட் பயிற்சியில், அவ்வளவு சிறப்பாக பந்து வீச மாட்டார். ஆனால், போட்டியில் சிறப்பாக பந்து வீசிவிட்டார். அதேபோல், தவான், ரோஹித் ஷர்மா, புவனேஷ்வர்குமார், பூம்ரா ஆகியோரும் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். 'இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம்' என்று கூறியுள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!