வெளியிடப்பட்ட நேரம்: 04:57 (17/06/2017)

கடைசி தொடர்பு:07:44 (17/06/2017)

ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை புரியுமா கத்துக்குட்டி ஸ்காட்லாந்து!

ஒரு பக்கம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பற்றி கிரிக்கெட் உலகமே பேசிக் கொண்டிருக்கும்போது, மறு பக்கம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதன்முறையாக ஒருநாள் தொடரை வெற்றி பெறும் நோக்குடன் களத்தில் உள்ளது ஸ்காட்லாந்து.

ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகின்றது. கடந்த வியாழக்கிழமை ஸ்காட்லாந்தின் எடின்பர்க் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஸ்காட்லாந்து ஜிம்பாப்வேவை முதன்முறையாக வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இன்று நடக்கும் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது ஸ்காட்லாந்து. அப்படி ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால், முதன்முறையாக டெஸ்ட் போட்டி விளையாடும் அந்தஸ்துடைய அணியுடனான தொடரைக் கைப்பற்றிய பெருமை அதற்கு வந்து சேரும். 

இது குறித்து ஸ்காட்லாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் கைல் கோயிட்சர், 'நாங்கள் சமீபத்தில்தான் இலங்கை மற்றும் நமீபியா அணிகளை வீழ்த்தியுள்ளோம். அதனால், ஜிம்பாப்வேவை வீழ்த்தும் வல்லமை எங்களுக்கு இருக்கிறது என்றே நம்புகின்றோம்.' என்று தெரிவித்துள்ளார்.