வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (17/06/2017)

கடைசி தொடர்பு:15:09 (17/06/2017)

#ChampionsTrophy இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு!

சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்தியா

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அரையிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் களமிறங்குகின்றன. பரபரப்பான இந்த ஆட்டத்தில்  வெல்லப்போவது யார் என்று உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, இன்று உத்தரப்பிரதேசத்தில் இந்திய அணி இறுதிப்போட்டியில் வெல்வதற்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இஸ்லாமியர்கள் நடத்திய இந்த வழிபாட்டில் கிரிக்கெட் மட்டைகள், விராட் கோலியின் படம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு தொழுகை செய்யப்பட்டது. பெண்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். நாளை பிற்பகல் 3 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.