பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுமா? அமித் ஷா அதிரடி பதில்

சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

இந்தியா

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அரையிறுதிப் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்தியா-பாகிஸ்தான் மோதும் சாதாரண போட்டிகளில்கூட பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் இறுதிப்போட்டியில் அனல் பறப்பது நிச்சயம்.

இதனிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, 'இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஐ.சி.சி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே விளையாடுவார்கள். இந்தியாவில் பாகிஸ்தான் விளையாடுவதற்கோ, பாகிஸ்தானில் இந்தியா விளையாடுவதற்கோ வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அமித் ஷாவின் கருத்துக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!