வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (17/06/2017)

கடைசி தொடர்பு:17:06 (17/06/2017)

இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன்: உலகின் முதல் நிலை வீரரை வீழ்த்தினார் ஶ்ரீகாந்த்!

இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன் போட்டி, இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் சூ வே வாங்-கைச் சந்தித்த ஸ்ரீகாந்த், 21-15, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதேபோல், இந்தியாவின் மற்றொரு வீரரான பிரணாயும் அரையிறுதிக்கு முன்னேறினார்.

Srikanth

அதன்படி, இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில்  ஜப்பானின் கசுமசா சக்காயை எதிர்கொண்ட பிரணாய் 21-17, 26-28,18-21 என்ற செட்களில் போராடி தோற்றார்.  மற்றொரு போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான தென்கொரிய வீரர் சன் வான் ஹோவுடன் ஶ்ரீகாந்த் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்தப்போட்டியில், முதல் செட்டை எளிதில் கைப்பற்றினார் ஶ்ரீகாந்த். இதையடுத்து, இரண்டாவது செட்டை, மிகவும் எளிதில் கைப்பற்றி, கெத்து காட்டினார் சன்.

இதனால், மூன்றாவது செட்டில் ஆட்டம் அனல் பறந்தது. வெற்றிக்காக இருவரும் கடுமையாகப் போராடினர். ஆனால், கடைசி செட்டையும் ஶ்ரீகாந்த் கைப்பற்றினார். இதனால்,  21-15, 14-21, 24-22 என்ற செட் கணக்குகளில் சன்னை வீழ்த்தினார் ஶ்ரீகாந்த். இந்த வெற்றி மூலம் நாளை நடக்கும், இறுதிப் போட்டிக்கு ஶ்ரீகாந்த் முன்னேறியுள்ளார். நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் ஜப்பானின் சக்காய்யுடன் ஶ்ரீகாந்த் மோத உள்ளார்.