உலக ஹாக்கி தொடர் : கனடாவை வீழ்த்தியது இந்தியா!

உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், கனடா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ளன.

India Hockey


முதல் போட்டியில் இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. இதையடுத்து, இன்று நடந்தப் போட்டியில் இந்தியா - கனடா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. எஸ்.வி சுனில், ஆகாஷ்தீப் சிங், சர்தார் சிங் ஆகியோர் முதல் பாதியிலேயே தலா ஒரு கோல் அடித்தனர்.


இதனால், 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. கனடா அணி கடுமையாகப் போராடியும் அந்த அணியால், கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால், 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், குரூப்- பி பிரிவு, புள்ளிப் பட்டியலில் இந்தியா அணி முதல் இடத்தில் உள்ளது.


நாளை நடக்கும் போட்டியில், பாகிஸ்தானுடனும், 20 ஆம் தேதி நடக்கும் போட்டியில், நெதர்லாந்து அணியுடனும் இந்தியா மோத உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!