வெளியிடப்பட்ட நேரம்: 01:13 (18/06/2017)

கடைசி தொடர்பு:09:19 (19/06/2017)

'கடினமான சூழ்நிலையை கற்பனை செய்து களத்தில் சொல்லி அடிப்பேன்!' - இது கேப்டன் கோலி அதிரடி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்  போட்டிகள் என்று அனைத்திலும் தொடர்ச்சியாக 'மேட்ச்-வின்னராக' திகழ்ந்து வருகிறார். சாம்பியன்ஸ் டிராபியிலும் பௌலர்கள் மீது அவரின் ஆதிக்கம் தொடருகின்றது. இந்நிலையில் கோலி, தான் ஒரு போட்டிக்கு எப்படி தயாராகிறார் என்பதைப் பற்றி ஓப்பனாக பேசியுள்ளார்.

போட்டியில் விளையாடுவதற்கு முன்பு தனது பேட்டிங் ப்ளான் பற்றி கோலி, 'ஒரு கடினமான நேரத்தில் மாற்றுச் சிந்தனை கொண்டிருப்பது உங்களை மற்றவர்களிடத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டும். அப்படி நீங்கள் யோசித்து களம் கண்டீர்கள் என்றால், உங்கள் அணிக்கு வெற்றியைத் தேடித் தருவீர்கள். 

ஒரு சின்ன உதாரணம். மூன்று விக்கெட்டுகள் சீக்கிரமாக வீழ்த்தப்பட்டு விட்டது. அதனால் நாமும் ஆவுட்டாகி விடுவோம் என்று நினைத்தால், கண்டிப்பாக அவுட்டாகித்தான் விடுவீர்கள். ஆனால் அதுவே, மூன்று விக்கெட் வீழ்ந்துவிட்டது. நான் அட்டாக் செய்து ஆடப் போகிறேன். எனது அணியை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு வருவேன் என்று நினைத்தால் அது கண்டிப்பாக முடியும். காரணம் நீங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். நான் அதைப் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளை நினைத்துப் பார்த்து அதிலிருந்து மீண்டு வருவேன் என்று நம்புவேன். இப்படி நினைத்தாலும் அது எல்லா தடவையும் நடந்து விடாது. ஆனால், பத்துக்கு எட்டு முறை சாத்தியப்படும். 

மேலும், நான் ஒரு பௌலர் குறித்து நினைத்து கூடுதல் அழுத்தத்தை எற்றிக் கொள்ள மாட்டேன். அவர் இங்கிருந்து பந்து வீசுகிறார். அவர் இதைச் செய்வாறோ, அதைச் செய்வாறோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்க மாட்டேன். அவர் பந்து வீசுவதில் மட்டும்தான் என் கவனம் குவிந்துருக்கும்' என்று ஓப்பன் டாக் கொடுத்துள்ளார் கேப்டன் கோலி.