வெளியிடப்பட்ட நேரம்: 07:27 (18/06/2017)

கடைசி தொடர்பு:09:00 (19/06/2017)

வைரல் : பாகிஸ்தான் கேப்டனின் குழந்தையைக் கொஞ்சிய தோனி...!

சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தத் தொடரில் தனது முதல் போட்டியை தொடங்கிய பாகிஸ்தானுடனே, இறுதிப் போட்டியிலும் இந்தியா இன்று மோத உள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.சி.சி தொடரில் இந்தியா மோதல், கோலி தலைமையில் முதல் ஐ.சி.சி தொடர், 2,000 கோடி ரூபாய் பெட்டிங், பல கோடிகளில் விளம்பரம் என்று இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.

Dhoni


இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவின் குழந்தை அப்துல்லாவை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தூக்கிக் கொஞ்சும் போட்டோ வைரல் ஆகி வருகிறது. இறுதிப் போட்டியை முன்னிட்டு, இரு அணிகளும் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.


அப்போது, பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் தனது குழந்தை அப்துல்லாவுடன், தோனியைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தோனி அப்துல்லாவை தூக்கிக் கொஞ்சும் போட்டோ எடுக்கப்பட்டது. போட்டோ வெளியான உடனேயே, அது சமூக வலைதளங்களில் செம வைரல் ஆகியது. குறிப்பாக, இரு நாட்டு ரசிகர்கள் இடையேயும், இதற்கு பாஸிட்டிவ் கமென்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.