வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (18/06/2017)

கடைசி தொடர்பு:07:57 (19/06/2017)

#INDvPAK சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டி... இந்தியா பௌலிங்!

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐ.சி.சி தொடரின் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. நடப்பு சாம்பியனான இந்தியா, கோப்பையை தக்க வைப்பதற்காகவும், கோலி தலைமையில் முதல் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்க உள்ளது.

India Vs Pakistan


அதேநேரத்தில், 2007 டி-20 உலகக் கோப்பை தோல்வி மற்றும் இந்தத் தொடரில் லீக் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் களமிறங்க உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோதினால் சாதாரணப் போட்டியிலேயே அனல் பறக்கும். இந்நிலையில், சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டி என்றால் கேட்கவா வேண்டும்? 


மைதானம் முழுவதும் இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் குவிந்துள்ளனர். அதேபோல், டி.வியிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள், இந்தப் போட்டியை காண ஆர்வமாய் உள்ளனர். இந்நிலையில், டாஸ் வென்ற கேப்டன் கோலி பௌலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 


இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முகமது அமீர் அணிக்குத் திரும்பியுள்ளார்.