வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (18/06/2017)

கடைசி தொடர்பு:07:46 (19/06/2017)

இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன்...ஶ்ரீகாந்த் சாம்பியன்!

இன்று நடைபெற்ற இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் ஜப்பானின் கசுமசா சக்காயை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினார் ஶ்ரீகாந்த் கீடாம்பி.

ஶ்ரீகாந்த்

இந்தோனேசிய ஓப்பன் பேட்மின்டன் போட்டி, இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில், இந்திய வீரர் பிரணாயை ஜப்பானின் கசுமசா சக்காய் வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்கொரிய வீரர் சன் வான் ஹோவை இந்திய வீரர் ஶ்ரீகாந்த் கீடாம்பி வீழ்த்தினார். 

இதையடுத்து கசுமசா சக்காயும் ஶ்ரீகாந்தும் இன்று இறுதிப்போட்டியில் மோதினர். ஜகார்த்தாவில் நடந்த இப்போட்டியில், கசுமசா சக்காயை  21 - 11, 21 - 19 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தி வெற்றி பெற்றார் ஶ்ரீகாந்த் கீடாம்பி. 3-வது முறையாக ஜப்பான் வீரரை வீழ்த்தி கோப்பையை வெல்கிறார் ஶ்ரீகாந்த் கீடாம்பி.

கிரிக்கெட், ஹாக்கி, பேட்மின்டன் ஆகிய விளையாட்டுகளில் இன்று இந்தியா முக்கிய போட்டியில் விளையாடுகிறது. தற்போது பேட்மின்டனில் கோப்பையை வென்றுவிட்டோம்... மீதம் 2 தான்...!