வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (18/06/2017)

கடைசி தொடர்பு:07:28 (19/06/2017)

#ChampionsTrophy ஃபகர் சமான் சதம்... இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு

இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்துள்ளது.

பாகிஸ்தான்

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பரம வைரியான இரு அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவதால், உலகம் முழுவதும் யார் வெல்வார்கள் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதனிடையே, இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஃபகர் சமான் 114 ரன்களும், ஹஃபீஸ் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும், அசார் அலி 59 ரன்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் புவனேஷ்வர் குமார், பாண்டியா, ஜாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 339 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்குகிறது இந்தியா.