வெளியிடப்பட்ட நேரம்: 20:33 (18/06/2017)

கடைசி தொடர்பு:20:33 (18/06/2017)

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி..!

உலக ஹாக்கி லீகில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது இந்தியா.

ஹாக்கி

உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. ஸ்காட்லாந்து, கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ள இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது.

லண்டனில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்தியா. 7-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இதையடுத்து நடைபெறவுள்ள ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. 

இன்று பேட்மிண்டன், ஹாக்கி போட்டிகளில் விளையாடிய இந்தியா இரண்டிலும் வெற்றிபெற்றுள்ளது.  சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் மட்டும் தான் பாக்கி...!