வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (19/06/2017)

கடைசி தொடர்பு:11:19 (19/06/2017)

மீண்டும் பாகிஸ்தானுக்குப் பாராட்டு! கொதித்தெழுந்த கம்பீர்

சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் முடிந்து விட்டது. ஆனால், சாம்பியன்ஸ் ட்ராபியை வைத்து இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதும்,  ஜம்மு- காஷ்மீரிலுள்ள பிரிவினைவாதத் தலைவர் மிர்விஸ் உமர் ஃபரூக் தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்கும் பட்டாசு சத்தம்தான் கேட்கிறது. ரம்ஜான் பண்டிகையைப் போல உள்ளது. அந்த நாளில் சிறப்பாகச் செயல்படும் அணி வெற்றி பெறும். பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள்" என்று கூறியிருந்தார்.

Gambhir

 

முன்னதாக, அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதற்கும் உமர் வாழ்த்து தெரிவித்திருந்தார். 
இந்நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள கிரிக்கெட் வீரர் கம்பீர், "மிர்விஸ் உமர் ஃபரூக்குக்கு ஒரு பரிந்துரை. நீங்கள் ஏன் எல்லையைத் தாண்டிச் செல்லக் கூடாது. அங்கு இன்னும் அதிகமாகப் பட்டாசு சத்தம் கேட்குமே. ரம்ஜானையும் சிறப்பாகக் கொண்டாடலாம். பெட்டி, படுக்கையை பேக் செய்ய நான் உதவுகிறேன்" என்று கூறியுள்ளார்.