ஹாக்கி வீரர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் வித்தியாசம் இதுதான்! | Why Indian hockey team wore black arm bands against pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 10:34 (19/06/2017)

கடைசி தொடர்பு:11:23 (19/06/2017)

ஹாக்கி வீரர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் வித்தியாசம் இதுதான்!

ண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த அதே நேரத்தில் லீ வேலி ஹாக்கி மைதானத்தில் இந்திய ஹாக்கி வீரர்கள் பாகிஸ்தான் அணியைப் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்திய ஹாக்கி அணியோ 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியைத் துவம்சம் செய்தது.

இரு போட்டிகளும் ஒரே நாளில் ஒரே நகரில்தான் நடந்தன. ஆனால், இந்திய ஹாக்கி வீரர்கள் கையிலோ கறுப்புப் பட்டையைக் காண முடிந்தது. ஹாக்கி அணியின் பயிற்சியாளர்களும், உதவியாளர்களும்கூட கையில், கறுப்புப் பட்டை அணிந்திருந்தனர். ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கையில் கறுப்புப் பட்டை அணிந்து இந்திய ஹாக்கி அணி விளையாடியது. இதுபோன்ற காட்சியை ஓவல் மைதானத்தில் காண முடியவில்லை!

இது குறித்து இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் முகமது முஸ்டாக் அகமது கூறுகையில்,'' இந்திய ஹாக்கி சம்மேளனமும் அணியும் தேசத்தின் பாதுகாப்புக்காகப் போராடும் வீரர்களுக்கு ஆதரவாக எந்தச் சூழலிலும் இருந்து வந்திருக்கிறது. ஜம்முவில் அண்மையில் நடந்த தாக்குதலில் 6 போலீஸாரும் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்தனர் '' என்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அப்போது, இந்திய அணியின் கேப்டன் பி.ஆர். ஸ்ரீஜேஷ் வெற்றிக் கோப்பையைத் தாய் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க