வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (19/06/2017)

கடைசி தொடர்பு:20:33 (19/06/2017)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனின் இந்தியப் பின்னணி தெரியுமா? 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் தாயார் அகீலா பானு இந்தியர். உத்தரப்பிரதேச மாநிலம் எட்வா பகுதியைச் சேர்ந்தவர். கராச்சி நகரைச் சேர்ந்த ஷகீல் அகமதுவுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பின்னரே, அகீலா பானு பாகிஸ்தான் சென்றார். சர்ஃபராஸ் அகமதுவின் தாய்மாமன் மெக்மூத் ஹசன், Etawah Agriculture Engineering கல்லூரியில் க்ளெர்க்காகப் பணி புரிகிறார். மாமாவும் மருமகனும் இதுவரை மூன்று முறை மட்டுமே நேரில் சந்தித்துள்ளனர். 

1991ம் ஆண்டு ஹஸனின் திருமணம் எட்வாவில் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்க தாயாருடன்  சர்ஃபராஸ் முதன்முறையாக இந்தியா வந்தார். அப்போது, சர்ஃபராசுக்கு நான்கு வயதுதான் ஆகியிருந்தது.

 

கடந்த டி20 உலகக் கோப்பையின் போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி சண்டிகரில் விளையாடியது. அந்த சமயத்தில் இரண்டாவது முறையாக இருவரும் சந்தித்துள்ளனர். பின்னர் 2015ம் ஆண்டு கராச்சியில் நடந்த  சர்ஃபராஸ் அகமதுவின் திருமணத்தில் ஹசன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். 

இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும்போது உங்கள் மனம் எந்நிலையில் இருக்கும்’ என்ற கேள்விக்கு ஹசன் பதிலளிக்கையில், '' ''சர்ஃபராஸ் அகமது அவன் நாட்டுக்காக விளையாடுகிறான்... நான் என் நாடு ஜெயிக்க வேண்டுமென்று பிரார்த்தித்துக்கொண்டிருப்பேன்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க