புரோ கபடி லீக்: தமிழக அணிக்கு சச்சின் வைத்த பெயர் இதுதான்!

ஐபிஎல் போட்டிக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, ஹாக்கி, கபடி, கால்பந்து, பேட்மின்டன் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2014ஆம் ஆண்டு புரோ கபடி லீக் தொடங்கப்பட்டது. 

Sachin Tendulkar


டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், பாட்னா, புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய எட்டு அணிகள் இதில் பங்கேற்றன. ஆரம்பத்தில் இதற்கு பெரிய வரவேற்பு இல்லை என்றாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, அடுத்த தொடரிலிருந்து, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய நான்கு அணிகள் புரோ கபடியில் மல்லுக்கட்ட உள்ளன. முக்கியமாக, இதில் சென்னை அணியை வாங்கியுள்ளார், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.

முன்னாள் சாம்பியனான ஜெய்ப்பூர் அணியின் பயிற்சியாளராக இருந்த, தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன், தமிழக அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி உலகக்கோப்பை வெல்லக் காரணமாக இருந்த அஜய் தாக்கூர், தமிழக வீரர் அருண் குமார் என்று பக்கா அணியை இறக்கியுள்ளனர். ஜூலை 28 ஆம் தேதி புரோ கபடி லீக் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில், இதில் பங்குபெறும் தமிழக அணியின் பெயர்களை, சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழக அணிக்கு 'தமிழ் தலைவாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!